முகப்பு
உலகம்

அவசரகால நிதி: உக்ரைனுக்கு ரூ.2,600 கோடியை வழங்கியது ஐரோப்பிய ஆணையம்

போரால் பாதிப்புகளைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு அவசரகால நிதியாக ரூ.2,600 கோடியை வழங்கியது ஐரோப்பிய ஆணையம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
ஐரோப்பியஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்
பகிர்:

போரால் பாதிப்புகளைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு அவசரகால நிதியாக ரூ.2,600 கோடியை வழங்கியது ஐரோப்பிய ஆணையம்.

உக்ரைனில் கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் ரஷியப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. போரில் உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியதுடன் தொடர் தாக்குதலையும் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே உக்ரைன் அரசு போரைச் சமாளிக்க பல நாடுகளின் உதவியை நாடி வரும் நிலையில் ஐரோப்பிய ஆணையம் அவசரகால நிதியாக உக்ரைனுக்கு ரூ.10,200 கோடியை(1.2 பில்லியன் யூரோ) வழங்க முன் வந்தது.

இந்நிலையில், அவசரகால நிதியின் முதல் தொகையாக ரூ.2,600 கோடியை(300 மில்லியன் யூரோ) ஐரோப்பிய ஆணையம் உக்ரைனுக்கு வழங்கியுள்ளதாக ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →