மேற்கு உக்ரைன் நகரங்களையும் குறிவைத்துத் தாக்கும் ரஷிய படைகள்
மேற்கு உக்ரைன் நகரமான இவானோ-ஃபிரான்கிவிஸ்க் மற்றும் லட்ஸ்க் அருகே உள்ள விமான நிலையம் அமைந்திருக்கும் பகுதியில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மரியுபோல்: மேற்கு உக்ரைன் நகரமான இவானோ-ஃபிரான்கிவிஸ்க் மற்றும் லட்ஸ்க் அருகே உள்ள விமான நிலையம் அமைந்திருக்கும் பகுதியில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரஷிய படைகள் உக்ரைனின் முக்கிய பகுதிகளில் படைகளைக் குவித்து தாக்குதல் நடத்தி வரும் இடத்திலிருந்து மேற்கு உக்ரைன் நகரங்கள் வெகு தொலைவிலிருக்கும் நிலையில், அப்பகுதிகளிலும் ரஷிய படைகள் தாக்குதலைத் தொடங்கியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவானோ - ஃபிரான்கிவிஸ்க் நகரின் மேயர் ரஸ்லன் மார்ட்சின்கிவ் கூறுகையில், இந்தப் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து வான்வழியாக தாக்குதல் எச்சரிக்கைக் கொடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தும் மேயர் அறிவித்துள்ளார்.
ரஷிய படைகள் குவிக்கப்பட்டு போர் நடந்து வரும் பகுதியிலிருந்து இந்த மேற்கு உக்ரைன் நகரங்கள் வெகு தொலைவில் இருக்கும் நிலையில், இங்கும் தாக்குதல்கள் தொடங்கியிருப்பது, உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு வேறு திசைக்குத் திரும்புவதை எடுத்துக் கூறுவதாக உள்ளது.