உக்ரைனில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கும் ரஷியா?
உக்ரைனின் பல பகுதிகளில் எச்சரிக்கை ஒலிகள் ஒலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் பல பகுதிகளில் எச்சரிக்கை ஒலிகள் ஒலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் தொடர்ந்து 17-வது நாளாக ரஷியப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய ரஷியா தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
குறிப்பாக, தலைநகர் கீவை முழுமையாகக் கைப்பற்ற ரஷியத் தரைப்படைகள் முயன்று வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ரஷியா வான்வழித் தாக்குதலில் ஈடுபடலாம் என்பதால் எச்சரிக்கை ஒலி(சைரன்) ஒலிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் தலைநகர் கீவில் சைரன் ஒலிக்கத் தொடங்கியதால் மக்கள் பதற்றம் அடைந்த நிலையில் தற்போது எச்சரிக்கை ஒலிகள் ஒலிக்கத் தொடங்கியது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க | உக்ரைன் மேயரைக் கடத்தியது ரஷியப் படை