முகப்பு
உலகம்

சீனாவில் மீண்டும் கரோனா: 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உச்சம்

சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3,400 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:41 AM
கோப்புப்படம்
பகிர்:


சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3,400 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் நேற்றைய (சனிக்கிழமை) தினத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது அந்த நாட்டில் பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்லது. நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, ஷாங்காய் நகரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு வடகிழக்கு நகரங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

வட கொரியா எல்லையிலுள்ள யான்ஜி பகுதி முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது. 

கரோனா நோய்த் தொற்று முதன்முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிதளவில் பாதிப்பு அதிகரித்தபோது பொதுமுடக்கங்கள், பயணக் கட்டுப்பாடு, அதிகளவு பரிசோதனை உள்ளிட்டவைக் கடுமையாகப் பின்பற்றப்பட்டு நோய்த் தொற்று இல்லாமல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரான் வகை மற்றும் தொற்று பாதிப்பின் அறிகுறி இல்லாத் தன்மை காரணமாக மீண்டும் அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →