உலகம்

மரியுபோல் தாக்குதலில் படுகாயமடைந்த கர்ப்பிணி பலி

DIN

உக்ரைனின் மரியுபோல் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் காயமடைந்த கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் மீது, ரஷிய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலை  மேற்கொண்டன. மரியுபோல் பகுதியில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு மகப்பேறு மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியாதானதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகின.  

அப்போது,  மரியுபோல் தாக்குதலில் காயமடைந்த ஒரு கர்ப்பிணியை உக்ரைன் படையினர் ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டுசென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. 

அந்த கர்ப்பிணி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரியுபோல் பகுதியில் இதுவரை 100க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் இதில் அப்பகுதியைச் சேர்ந்த 2,187 பேர் உயிரிழந்துள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT