உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 46 கோடியைத் தாண்டியது

உலகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 60,05 லட்சமாக அதிகரித்துள்ளது.

DIN

உலகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 60,05 லட்சமாக அதிகரித்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

உலகளவில் கரோனா தொற்று பரவி அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 46,36,63,236 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் பலி எண்ணிக்கை 60,57,996 ஆக உள்ளதாக தினசரி தொற்று அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கையும், பலி எண்ணிக்‍கையும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,29,98,938 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,16,072 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT