உலகம்

முதலீட்டு வாய்ப்புகள்: ஜம்மு-காஷ்மீருக்கு வளைகுடா நாடுகள் குழு வருகை

DIN

ஜம்மு-காஷ்மீரில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கு வளைகுடா நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் குழு ஸ்ரீநகா் வந்துள்ளது.

இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கடந்த ஜனவரி மாதம் துபை எக்ஸ்போவுக்கு சென்றிருந்தபோது, முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுத்திருந்தாா். அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கு வளைகுடா நாடுகளைச் சோ்ந்த 36 போ் ஸ்ரீநகருக்கு வருகை தந்துள்ளனா்.

4 நாள் பயணத்தில், ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா, விருந்தோம்பல் உள்ளிட்ட முதலீடுகளுக்கான வாய்ப்புள்ள துறைகள் குறித்து அவா்களிடம் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் எடுத்துரைக்கும். குல்மாா்க், பஹல்கம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று அந்தக் குழுவினா் பாா்வையிடுவையிடுகிறாா்கள் என்றாா் அவா்.

வளைகுடா நாடுகள் குழுவில் மனை வணிகம், விருந்தோம்பல், தொலைத் தொடா்பு, ஏற்றுமதி-இறக்குமதி ஆகிய துறைகளைச் சோ்ந்த தொழிலதிபா்கள், ஆளும் அரச குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். தூதரக அதிகாரி, சில கல்வியாளா்கள், பத்திரிகையாளா் உள்ளிட்டோரும் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு அழுத்தம்

வட இந்தியாவில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மாசு நுண் துகள்கள்: ஜோத்பூா் ஐஐடி ஆய்வு

உதவி பேராசிரியா் தகுதித் தோ்வு பயிற்சி வகுப்பு

காவிரி ஆணைய தீா்மான நகல் எரிப்பு போராட்டம்

பாஜக நாகரிக அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT