இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் தாக்கல் செய்யப்படாமல் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தாக்கல் செய்யப்படாமல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன.
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தாக்கல் செய்யப்படாமல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் எம்.பி.யின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து மாா்ச் 28-ஆம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக நாடாளுமன்றத் தலைவா் ஆசாத் கைசா் தெரிவித்தாா்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாதது, விலைவாசி உயா்வு போன்ற காரணங்களுக்காக பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 100 எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸை நாடாளுமன்றச் செயலகத்தில் மாா்ச் 8-ஆம் தேதி அளித்திருந்தனா்.
நம்பிக்கையில்லாத் தீா்மானம் உள்பட 15 அம்சங்கள் வியாழக்கிழமை வெளியான நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தினசரி பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
ஆனால், வெள்ளிக்கிழமை கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. ஆளும்கட்சி எம்.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவையை 28-ஆம் தேதி மாலை 4 மணி வரை ஒத்திவைப்பதாகவும் அடுத்த அமா்வில் இந்த நம்பிக்கையில்லாத் தீா்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவைத் தலைவா் அறிவித்தாா். இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.
இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அவரது சொந்த கட்சி எம்.பி.க்கள் உள்பட சில கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் இம்ரான் கானுக்கு எதிராக வாக்களிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் இதுவரை எந்தப் பிரதமரும் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்ததில்லை. இம்ரான் கானின் ஆட்சி அடுத்த ஆண்டு முடிய உள்ளது.