அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் பனிப்புயலால் சாலையில் 60 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 3 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் பனிப்புயலால் சாலையில் சென்றுகொண்டிருந்த 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.
மேலும், சில வாகனங்களில் தீப்பிடித்தது. இதன் காரணமாக, அப்பகுதியில் பயங்கர புகைமூட்டம் ஏற்பட்டதுடன் விபத்துகளில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, விபத்தால் உருவான போக்குவரத்து பாதிப்பால் பல தூரம் கார்கள், டிரக் போன்ற வாகனங்கள் சாலை முழுவதும் அணிவகுத்து நின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.