உலகம்

இஸ்ரேல் பிரதமருக்கு கரோனா: இந்தியப் பயணம் ஒத்திவைப்பு

DIN

இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட்டுக்கு கரோனா பாதிப்புஏற்பட்டுள்ளதால் அவரது இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை இந்தியாவில் 3 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அவருக்கு திங்கள்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரது இந்தியப் பயணம் ரத்து செய்யப்படுமா என்கிற கேள்வி எழுந்தது. 

இந்நிலையில் இதுகுறித்து இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ள தகவலில், இஸ்ரேல் பிரதமருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறியுள்ளார். 

அவரது இந்தியப் பயணத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT