உலகம்

ஒரு லட்சம் உக்ரைன் அகதிகளுக்கு உதவ தயாராகும் அமெரிக்கா

PTI


உக்ரைன் மீது ரஷிய படையெடுப்பைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வெளியேறிய ஒரு லட்சம் அகதிகளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க அமெரிக்கா தயாராகிவருகிறது.

அமெரிக்காவின் சாக்ரமெண்டோ மற்றும் சீயாட்டில் பகுதிகளில் ஏற்கனவே அகதிகளுக்கான குடில்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் செய்து வைக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் போர் முடிந்து, அந்நாட்டு மக்கள் மீண்டும் எப்போது குடியமர்த்தப்படுவார்கள் என்பது தெரியாத நிலையில், அமெரிக்காவில், ஒரு லட்சம் அகதிகளை தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே, விமானம் அல்லது பல்வேறு நாட்டு எல்லைகள் வழியாக அமெரிக்காவுக்கு வரும் உக்ரைன் மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது உக்ரைனிலிருந்து 1 லட்சம் அகதிகளை ஏற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT