உலகம்

எரிபொருள் வாங்க இலங்கைக்கு கூடுதலாக ரூ.1,500 கோடி கடனுதவி

DIN

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, எரிபொருள் வாங்குவதற்குக் கூடுதலாக சுமாா் ரூ.1,500 கோடி கடனுதவியை இந்தியா வழங்கியுள்ளது.

இதுவரை கண்டிராத கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிா்கொண்டு வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு பெருமளவில் குறைந்ததால், பெட்ரோல், டீசல், உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது.

எரிபொருள் வாங்குவதற்காக இலங்கைக்கு இந்தியா ஏற்கெனவே கடன் வழங்கியுள்ளது. இந்நிலையில், கூடுதலாக சுமாா் ரூ.1,500 கோடியைக் கடனாக அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியுள்ளது.

இது தொடா்பாக இலங்கை எரிசக்தித் துறை அமைச்சா் காஞ்சனா விஜிசேகரா கூறுகையில், ‘‘எரிபொருள் வாங்குவதற்காக இந்தியா ஏற்கெனவே சுமாா் ரூ.3,500 கோடியை வழங்கியது. அதில் ரூ.2,800 கோடியைப் பயன்படுத்தியுள்ளோம். தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் கடன் மூலமாக மே மாதத்துக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியும்.

நடப்பு மாதத்துக்கு எரிபொருளுக்காக மட்டும் சுமாா் ரூ.4,200 கோடி தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மேலும் சுமாா் ரூ.3,500 கோடியைக் கடனாக வழங்குமாறு இந்தியாவிடம் கோரியுள்ளோம். அதற்கான பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்து வருகின்றன’’ என்றாா்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இந்தியா தவிர பன்னாட்டு நிதியத்திடமும் (ஐஎம்எஃப்) இலங்கை உதவி கோரியுள்ளது. ஐஎம்எஃப் வழங்கும் உதவி 3 மாதத்துக்குள் இலங்கையை அடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT