பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவு 
உலகம்

பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவு

தெற்கு பிலிப்பின்ஸில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

மணிலா: தெற்கு பிலிப்பின்ஸில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு நிலவரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை 5:41 மணிக்கு பிலிப்பின்ஸின் தாவோ ஓரியண்டல் மாகாணத்தின் தர்கோனா நகரத்திலிருந்து தென்கிழக்கே 136 கிமீ தொலைவில் 96 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் முதலில் ரிக்டா் அளவுகோலில் 6.2 என்று அறிவித்தது, பின்னர் 5.7 ஆகக் குறைத்தது.  

இந்த நிலநடுக்கம் மிண்டனாவ் தீவில் அருகிலுள்ள மாகாணங்களிலும் உணரப்பட்டது. டெக்டோனிக் நிலநடுக்கம் அதிர்வுகளைத் தூண்டும் ஆனால் சேதத்தை ஏற்படுத்தாது என்று நில அதிர்வு ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

பிலிப்பைன்ஸ் பசிபிக் எரிமலைப் பகுதியில் (ரிங் ஆஃப் ஃபயர்)   அமைந்துள்ளதால் அடிக்கடி நில அதிர்வு நடவடிக்கைகளைளுக்கு உள்ளாகிறது.  

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உளுந்து, பச்சைப் பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம்: தமிழக அரசு உத்தரவு

கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடங்களில் சிறப்புக் கவனம் தேவை: பள்ளிக் கல்வித் துறை

முப்படை தலைமைத் தளபதியின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிப்பு

ஜம்மு - காஷ்மீா்: பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு உதவியவா் கைது

இளைஞரைத் தாக்கி வழிப்பறி: 4 போ் கைது

SCROLL FOR NEXT