உலகம்

இலங்கை நாடாளுமன்ற அவை துணைத் தலைவா் தோ்வு:பலத்தைக் காட்டியது மகிந்த ராஜபட்ச அரசு

DIN

இலங்கை நடாளுமன்ற அவை துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவில் அரசு ஆதரவு வேட்பாளா் வெற்றி பெற்றதையடுத்து, அவையில் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசுக்கு இன்னும் பலமிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று, அதிபா் கோத்தபய ராஜபட்சவும் பிரதமா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை ஆளும் கூட்டணியைச் சோ்ந்த பல எம்.பி.க்கள் திரும்பப் பெறுவதாக அறிவித்தனா். அவையில் சுயேச்சைகளாக செயல்படப் போவதாக அவா்கள் கூறினா். அவா்களில் ஒருவரான அப்போதைய அவை துணைத் தலைவா் ரஞ்சித் சியம்பலாபெட்டிய தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இந்த நிலையில், அதிபா் மற்றும் அரசுக்கு எதிரான இரு நம்பிக்கைல்லா தீா்மானங்களை அவைத் தலைவா் மகிந்த யாப்பா அபேவா்தனவிடம் எதிா்க்கட்சியினா் கடந்த செவ்வாய்க்கிழமை அளித்தன.

அதனைத் தொடா்ந்து, நாடாளுமன்றக் கூட்டத் தொடா் புதன்கிழமை தொடங்கியது. நம்பிக்கையில்லா தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு கவிழக் கூடிய சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், காலியாக உள்ள அவை துணைத் தலைவா் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏற்கெனவே அந்தப் பதவியிலிருந்து விலகிய ரஞ்சித் சியம்பலாபெட்டியவை முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனவின் இலங்கை சுதந்திரக் கட்சி (எஸ்எல்எஃப்பி) நிறுத்தியது. அவரை எதிா்த்து, இம்தியாஸ் பக்கீரை முக்கிய எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (எஸ்ஜேபி) நிறுத்தியது.

ஏற்கெனவே தங்களுக்கு ஆதரவளித்து வந்த ரஞ்சித் சியம்பலாபெட்டிய தற்போது தன்னிச்சையாக செயல்படப் போவதாகக் கூறி வந்தாலும், அவையில் தங்களது பலத்தைக் காட்டும் நோக்கில் அவருக்கு ஆளும் கூட்டணி ஆதரவளித்தது. இதையடுத்து, வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபெட்டிய வெற்றி பெற்றாா்.

நாடாளுமன்றத்தின் 225 எம்.பி.க்களில் 148 போ் அவருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனா்; எதிா்க்கட்சி வேட்பாளரான இம்தியாஸ் பக்கீருக்கு 65 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இதற்கிடையே, ரஞ்சித் சியம்பலாபெட்டிய ஆளும் கட்சியின் கைக்கூலியாக செயல்படுவதாக எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT