இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே 
உலகம்

‘மக்கள் வன்முறையை கைவிட வேண்டும்’: இலங்கை அதிபர்

மக்கள் வன்முறையை கைவிட வேண்டுமென இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DIN

மக்கள் வன்முறையை கைவிட வேண்டுமென இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். 

இதனைத் தொடர்ந்து, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஆத்திரமடைந்த மக்கள், பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்தனர். மக்கள் மீது ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினர் மீது மக்களும் மாறிமாறித் தாக்குதல் நடத்தி வருவதால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகின்றது.

இந்நிலையில், இலங்கை அதிபர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

இலங்கை மக்கள் அனைவரும் வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும். எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தவேண்டும்.

அரசியல் அமைப்பு சட்டப்படி, ஒருமித்த கருத்தின் மூலம் அரசியல் நிலைத்தன்மை ஏற்படுத்தி பொருளாதாரம் நெருக்கடியை சீர்செய்ய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறியுள்ள மகிந்த ராஜபட்ச, கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கடற்படை முகாம் முன்பு திரண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT