கோப்புப்படம் 
உலகம்

இலங்கையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

இலங்கையில் போராட்டக்காரர்களை ஒடுக்க மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

DIN

இலங்கையில் போராட்டக்காரர்களை ஒடுக்க மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரண்டாவது முறையாக அவசரநிலையை கடந்த வெள்ளிக்கிழமை அதிபா் பிரகடனம் செய்தாா். இதன் காரணமாக, மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியிலிருந்து திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். 

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, போராடி வரும் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்ததில் போராட்டக்காரர்கள் மீது ராஜபட்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அனைத்து காவலர்களுக்குமான விடுமுறை ரத்து செய்யப்பட்டது. 

அதற்கடுத்து கலவரத்தில் இலங்கை எம்.பி ஒருவரும் தாக்குதலுக்கு அஞ்சி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை அறிவித்திருந்தது.

மேலும், திங்கள்கிழமை இரவு மகிந்த ராஜபட்ச  வீட்டையும் இன்று அவரது சகோதரர் பசில் ராஜபட்ச  வீட்டையும் கொளுத்திய போராட்டக்காரர்களை அடக்க கொழும்புவில் காவல்துறை இன்று மீண்டும் துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடல் சூடு தணிக்கும் புதினா

பயணம்...

தாவரங்களைப் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் தேவை!

அரசு, கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுத்தாலும் அதனை பின்பற்றுவோம்: பாகிஸ்தான் கேப்டன்

இந்தியாவின் குரல்...

SCROLL FOR NEXT