உலகம்

போரில் ரஷியப் படையினர் 26,350 பேர் பலி: உக்ரைன்

DIN

உக்ரைனுடனான போரில் 26,350 ரஷிய வீரர்கள் பலியானதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப். 24-ஆம் தேதி போா் தொடுத்தது. இரண்டு மாதங்களைக் கடந்து தொடர்ந்து வரும் போரில் உக்ரைனின் தலைநகா் கீவை ரஷிய படைகளால் கைப்பற்ற முடியாவிட்டாலும், முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மரியுபோலை முழுமையாக கைப்பற்றியுள்ளன.

குறிப்பாக, ரஷியப் படைகள் கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களில் கடுமையான தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனின் தாக்குதலில் ரஷியப் படையினர் 26,350 பேர் பலியானதாகவும் ரஷியாவுக்குச் சொந்தமான  1,187 டாங்கிகள், 2,856 ஆயுதமேந்திய வாகனங்கள், 166 ஹெலிகாப்டர்கள் மற்றும் 199 விமானங்களையும் அழித்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT