உலகம்

இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

DIN

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். தொடர்ந்து, மகிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. 

இதனால், உருவான வன்முறைகளில் 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன் சிலர் பலியாகினர்.

அதன் பின், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை கண்டதும் சுடுவதற்கு முப்படைகளுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, இன்று இலங்கைக்கு ஆதரவாக இந்தியா படைகளை அனுப்பாது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில்  நிகழும் அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல்களின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக பெட்ரோலியம் கார்பரேஷன் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT