ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த விமானம் 
உலகம்

சீனாவில் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த விமானம்: 122 பேர் உயிர் தப்பினர்(விடியோ)

சீனாவில் ஓடுபாதையில் புறப்பட தயாரான விமானம் இன்று காலை தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

சீனாவில் ஓடுபாதையில் புறப்பட தயாரான விமானம் இன்று காலை தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோங்கிங் ஜியாங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8 மணியளவில் திபெத் ஏர்லைன்ஸ் விமானம் 113 பயணிகள், 9 ஊழியர்களுடன் புறப்பட்டது.

ஓடுபாதையில் சிறிது தூரம் சென்ற விமானம் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தை அறிந்த விமானிகள், விமானத்தை உடனடியாக நிறுத்தி பயணிகள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றியதால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சில பயணிகளுக்கு சிறு காயம் ஏற்பட்டதால், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், விமானம் ஓடுபாதையைவிட்டு விலகி புல்வெளிக்கு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதனூரில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் திறப்பு

மாா்த்தாண்டம் அருகே பதுக்கிய மண்ணெண்ணெய் பறிமுதல்

போதையில்லா சமுதாயமே இலக்கு...

ரத்த சோகை விழிப்புணா்வு: 3,500 பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை

பாா்வை பறிபோன பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

SCROLL FOR NEXT