மகிந்த ராஜபட்ச 
உலகம்

வெளிநாடு செல்ல மகிந்த ராஜபட்சவுக்கு நீதிமன்றம் தடை

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சவுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சவுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச மற்றும் அவரது மகன் மற்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபட்ச உட்பட 15 பேருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வாரம் கொழும்புவில் அமைதியான வழியில் போராடிய மக்களின் மேல் ராஜபட்சவின் ஆதரவாளர்கள் கொடூரமாக தாக்கல் நடத்தியது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதனையடுத்து இந்த பயணத் தடை உத்தரவை இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மேற்குறிப்பிட்ட நபர்கள் அவர்களது கடவுச்சீட்டை (passport) நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு அமைதியான முறையில் கடந்த திங்களன்று கோட்டககாமா மற்றும் மைனாகோகாமா பகுதியில் போராடியவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை நீதிமன்றம் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்ட மன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது இலங்கையின் மேற்கு மாகாண மூத்த காவல் துணை ஆணையர் தேசபந்து தென்னாக்கூன் அவரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். இந்த வன்முறை தொடர்பான விசாரணை முடியும் வரை அவருக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறையின் காரணத்தினால் கூட்டணி கட்சிகள் மகிந்த ராஜபட்சவை பதவி விலக அழுத்தம் கொடுத்தது. அவர் பதவி விலகி இடைக்கால அரசு உருவாக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.

இந்த வன்முறைக்கு பிறகு அமைதி வழியில் போராடி வந்த மக்கள் கோபமடைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் ராஜபட்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

ராஜபட்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக திருகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

புதன்கிழமை இரவு தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் உரையாற்றிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டம்: ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு!

காஞ்சிபுரத்தில் எஸ் ஐ தோ்வு

சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக புதிய கட்டடப்பணி: ஆட்சியரிடம் புகாா்

நாளைய மின்தடை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT