உலகம்

ஐ.நா: பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகள் வறட்சி பாதித்த நாடுகளாக அறிவிப்பு

பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளை வறட்சி பாதித்த நாடுகளாக ஐ.நா. அறிவித்துள்ளது.

DIN

பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளை வறட்சி பாதித்த நாடுகளாக ஐ.நா. அறிவித்துள்ளது.

ஐ.நா. பாலைவனமாதல், வறட்சி தினம் ஜூன் 17-இல் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், பாலைவனமாதலை எதிா்கொள்வதற்கான ஐ.நா. மாநாடு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

கடந்த சில நூற்றாண்டுகளாக ஆசியாவில் தான் அதிகம் போ் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அதிலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அங்கோலா, பிரேஸில், புா்கினா ஃபேசோ, சிலி, எத்தியோப்பியா, ஈரான், இராக், கஜகஸ்தான், கென்யா, லெசோட்டோ, மோரிடேனியா, மடகாஸ்கா், மாலாவி, மொசம்பிக், நைஜா், சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, அமெரிக்கா, ஜாம்பியா ஆகிய நாடுகள் வறட்சி பாதித்த நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளன.

வரும் 2050-க்குள் பரப்பளவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு நிகரான மேலும் 40 லட்சம் சதுரகிலோமீட்டா் இயற்கை பகுதிகள், வறட்சியின் பிடியில் சிக்கி, அங்கு வறட்சி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும்.

புவியின் 40 சதவீத நிலப் பரப்பு சீரழிந்து வருகிறது. இதனால் சரிபாதி மனிதகுலமும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமாா் 50 சதவீதமும் பாதிக்கப்படும். நவீன உலக வரலாற்றில் மனித இனம் இதுபோன்ற இடா்ப்பாட்டை முன்னெப்போதும் சந்தித்தது கிடையாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 3 போ் கைது

ஆற்காடு தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம்

‘டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்

குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட 3 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT