கோப்புப்படம் 
உலகம்

அபுதாபியில் எரிவாயு வெடிப்பு: 2 பேர் பலி, 120 பேர் காயம்

அபுதாபியில் ஹோட்டல் ஒன்றில் இன்று (செவ்வாய்கிழமை) எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 2 பேர் பலியாகியுள்ளனர். 120 பேர் காயமடைந்துள்ளனர்.

DIN

அபுதாபியில் ஹோட்டல் ஒன்றில் இன்று (செவ்வாய்கிழமை) எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 2 பேர் பலியாகினர். 120 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறை சார்பில் ட்விட்டர் பதிவு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த விபத்தில் 64 பேர் லேசான காயங்களுடனும், 56 பேர் பலத்த காயமும் அடைந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் 6 கட்டடங்கள் பாதிப்புக்குள்ளாகின.  அதில், 4 கட்டடங்களிலிருந்து பலர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த விபத்தை நேரில் பார்த்த நபர் கூறியதாவது,

மதிய உணவு வேளையில் இரண்டு வெடி விபத்து சத்தங்கள் கேட்டன. முதல் சத்தம் பெரிய அளவில் இல்லை. ஆனால், இரண்டாவதாக கேட்ட சத்தம் சக்தி வாய்ந்ததாக இருந்தது. வெடித்துச் சிதறிய சத்தத்தினால் அருகிலுள்ள அலுவலகங்கள் சிலவற்றின் கண்ணாடிகள் நொறுங்கின" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 ஐபிஎல் எப்போது? ஏலத்துக்கு முன்பே வெளியான நற்செய்தி!

தூத்துக்குடி முதல் சென்னை வரை.. கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

விஜய் கூட்டத்துக்கு பாஸ் தேவையில்லை; அனைவரும் வரலாம்! செங்கோட்டையன்

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

2025-இன் சிறந்த வீராங்கனை: 25 ஆண்டுகால சாதனை பட்டியலில் இடம்பிடித்த சபலென்கா!

SCROLL FOR NEXT