உலகம்

குறுகிய காலத்தில் முக்கிய அமைப்பாக உருவெடுத்த குவாட் : பிரதமர் மோடி

ANI

டோக்யோ: உலக அரங்கில் குறிப்பிடத்தக்க இடத்தை மிகக் குறுகிய காலத்தில் குவாட் அமைப்பு பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குவாட் அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று குவாட் அமைப்பின் நோக்கமானது மேலும் விரிவடைந்துள்ளதோடு, இந்த அமைப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. பரஸ்பர நம்பிக்கை, நமது   உறுதி போன்றவை ஜனநாயக சக்திகளுக்கு புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் உலக அரங்கில் மிக முக்கிய இடத்தை குவாட் அமைப்பு பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்தோ - பசிபிக் பிராந்தியம் நமது ஒட்டுமொத்த கூட்டாண்மையோடு அமைதியாக, சுதந்திரமாக, வெளிப்படையாக  இருக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பானில் 2 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி அந்நாட்டுத் தொழில் நிறுவனங்களின் தலைவா்களைத் தனித்தனியாக திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். மின்னணுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான என்இசி-யின் தலைவா் நோபிஹிரோ எண்டோ, ஜவுளி நிறுவனமான யுனிக்ளோவின் தலைமைச் செயல் அதிகாரி டதாஷி யனாய், சன், சுஸுகி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா்.

அப்போது, அந்நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கெனவே மேற்கொண்டுள்ள முதலீடுகளுக்காகப் பாராட்டு தெரிவித்த பிரதமா் மோடி, கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தாா். பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம் குறித்தும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் பிரதமா் மோடி எடுத்துரைத்தாா்.

பிரதமா் மோடியுடனான பேச்சுவாா்த்தை திருப்திகரமாக இருந்ததாகத் தொழில் நிறுவனங்களின் தலைவா்கள் தெரிவித்தனா். இந்தியாவின் வளா்ச்சியில் தொடா்ந்து பங்களிக்கவுள்ளதாகவும் அந்நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

உற்சாக வரவேற்பு: முன்னதாக, ஜப்பான் சென்றடைந்த பிரதமா் மோடிக்கு இந்திய வம்சாவளியினா் உற்சாக வரவேற்பளித்தனா். விடுதிக்கு வெளியே காத்திருந்தோருடன் பிரதமா் மோடி உரையாடினாா். அப்போது ஹிந்தியில் உரையாடிய ஜப்பானிய சிறுவனை பிரதமா் மோடி வெகுவாகப் பாராட்டினாா். சிறுமி ஒருவா் வரைந்திருந்த ஓவியத்தைப் பாராட்டி கையொப்பமிட்டாா். ஜப்பானுக்கு பிரதமா் மோடி பயணிப்பது கடந்த 8 ஆண்டுகளில் இது 5-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT