உலகம்

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.180-க்கு விற்பனை

DIN

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசலின் கடுமையாக உயர்த்த்ப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு நேற்று வியாழக்கிழமை அனைத்து விதமான எரிபொருள்களின் விலையையும் திடீரென உயர்த்தியது.

அதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.30 உயர்த்தப்படுவதாக அறிவித்ததுடன் நாட்டில் நிலவிவரும் பணவீக்கம் காரணமாகவே இந்த புதிய விலையேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.179.86-க்கும், டீசல் ரூ.174.15-க்கும், மண்ணெண்ணெய்  ரூ.155.56-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இந்த திடீர் விலையேற்றம் குறித்து பாகிஸ்தான் நாட்டின் எதிர்கட்சித் தலைவர் இம்ரான் கான் “இதற்கு முன் எரிப்பொருள்கள் இவ்வளவு பெரிய விலையேற்றத்தைக் கண்டதேயில்லை” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT