சுரங்கத்தில் இறந்த நிலையில் 21 பேரின் உடல்கள் தென்னாப்பிரிக்க காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் சட்டவிரோதமாக சுரங்க வேலை செய்பவர்களாக இருக்கக் கூடும் என காவல் துறை தரப்பில் சந்தேகிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: நேற்று ( நவம்பர் 2) மதியம் 19 பேரின் உடல்களும், இன்று (நவம்பர் 3) காலை 3 பேரில் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் அருகில் உள்ள தனியார் சுரங்கத்தில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்திருக்கலாம். குருகர்ஸ்டோர்ப் நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இது போன்ற சட்டவிரோத சுரங்க வேலைகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதத்தில் படப்பிடிப்பிற்காக சுரங்கப் பகுதிக்கு சென்ற 8 பெண்கள் பாலியல் ரீதியிலான தொந்தரவுக்கு ஆளானது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல கடந்த வாரம் 14 பேர் கொண்ட கும்பர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக புகார் வந்தது. அதிலும், இந்த சட்டவிரோதமாக சுரங்கங்களில் வேலை செய்பவர்களின் மீதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் பல இடங்களிலும் சட்டவிரோதமான சுரங்க வேலைகள் பெருகிவிட்டது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.