இன்ஸ்டாகிரம் 
உலகம்

ரகசிய திருமணம்: தேனிலவு கொண்டாடும் உலக அழகிகளின் புகைப்படங்கள் வைரல்

ஆர்ஜெண்டினாவின் உலக அழகி மரியானா வரேலா மற்றும் பியூர்டோ ரிகோ நாட்டின் உலக அழகி ஃபேபியோலா வேலண்டின் இருவரும் தங்களது தேனிலவு புகைப்படங்களை இன்ஸ்டாகிரமில் பகிர்ந்துள்ளனர். 

DIN

ஆர்ஜெண்டினாவின் உலக அழகி மரியானா வரேலா மற்றும் பியூர்டோ ரிகோ நாட்டின் உலக அழகி ஃபேபியோலா வேலண்டின் இருவரும் தங்களது தேனிலவு புகைப்படங்களை இன்ஸ்டாகிரமில் பகிர்ந்துள்ளனர். 

இந்த உலக அழகிகள் இருவரும் பல நாள்களாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணப் புகைப்படத்தை இன்ஸ்டாகிரமில் பதிவிட்டு பலரையும் ஆச்சர்யமடைய வைத்தனர். 

இந்த நிலையில், இந்த அழகிகள் தங்களது தேனிலவு புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிரமில் பதிவிட்டுள்ளனர்.

உலக அழகிகளான வரேலா மற்றும் வேலண்டின் 2020ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச உலக அழகிப் போட்டியில் முதல் முறையாக சந்தித்துள்ளனர். அந்த உலக அழகிப் போட்டியில் இரு அழகிகளும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்தனர். உலக அழகிப் போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்த இவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் நல்ல நண்பர்களாக மாறியுள்ளனர்.

இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. காதல் வயப்பட்ட இருவரும் வெளி உலகுக்கு தெரியாத வண்ணம் பலமுறை வெளியில் சென்று உலாவுவதை (டேட்டிங்)  முழு நேர வேலையாக செய்து வந்துள்ளனர்.

இதில், ஆச்சர்யப்படக் கூடிய விஷயம் என்னவென்றால் அவர்கள் தங்களது உறவு குறித்தும், திருமணம் குறித்தும் அறிவிக்கும் முன்பு வரை அவர்களது ரசிகர்களுக்கோ அல்லது வெளி உலகுக்கோ இந்த விஷயம் துளி கூடத் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT