முகப்பு
உலகம்

சவாலான காலங்களில் இந்தோனேசியாவுடன் இந்தியா துணை நின்றது: பிரதமர் மோடி

சவாலான காலங்களில் இந்தோனேசியாவுடன் இந்தியா உறவு உறுதியாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:51 AM
பகிர்:

பாலி:  சவாலான காலங்களில் இந்தோனேசியாவுடன் இந்தியாவின் உறவு உறுதியாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக இந்த உறுதி அமைந்தது என்றும் அவர் கூறினார்.

ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினரிடம் உரையாற்றிய போது 'ஆபரேஷன் சமுத்ரா மைத்ரி' என்ற நடவடிக்கையை இந்தியா 2018-ல் மேற்கொண்டதை நினைவு கூர்ந்தார்.

​​இந்தியாவும் இந்தோனேசியாவும் 90 கடல் மைல்கள் தொலைவில் இருக்கலாம், உண்மையில் அது 90 கடல் மைல் தொலைவு அல்ல, 90 கடல் மைல்கள் நெருக்கமாக உள்ளோம் என்றார்.

இந்தியாவில் பிரம்மாண்டமான ராமர் கோவில் உருவாகும் நேரத்தில், இந்தோனேசியாவின் ராமாயண பாரம்பரியத்தையும் நாங்கள் பெருமையுடன் நினைவுகூருகிறோம் என்றார்.

19 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 ஒன்றியத்தில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →