உலகம்

சீனாவில் அதிகரிக்கும் கரோனா: பீகிங் பல்கலை மூடல்! 

சீனாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பெய்ஜிங்கில் உள்ள பீகிங் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளன. 

DIN

சீனாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பெய்ஜிங்கில் உள்ள பீகிங் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளன. 

பெய்ஜிங்கில் கடந்த 24 மணி நேரத்தில் 350-க்கும் மேற்பட்ட கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த பாதிப்பு என்றாலும், கரோனா இல்லாத மாநிலமாக மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

நாடு முழுவதும், சீனாவில் கரோனா பாதிப்பு சுமார் 20,000 ஆக உள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு 8,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

பெங்ஜிங்கில் இயங்கிவரும் மிகப்பெரிய பல்கலைக்கழகமான பீகிங்கில் அதிகளவிலான மாணவர்கள் பயின்று வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி இப்பல்கலைக்கழகம் மூட உத்தரவிட்டுள்ளது. 

பீகிங் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசியமின்றி பல்கலை வளாகத்தை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் வகுப்புகள் ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளத்தில் தொழிலாளிக்கு வெட்டு

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

மயிலாடுதுறையில் ஆசிரியா்களுக்கு விருது

எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க கோரிக்கை

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT