உலகம்

பாலி மாங்குரோவ் காடுகளை பார்வையிட்ட உலகத் தலைவர்கள்!

இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடைபெற்று வரும் நிலையில், பாலி மாங்குரோவ் காடுகளை உலகத் தலைவர்கள் இன்று காலை பார்வையிட்டனர்.

DIN

இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடைபெற்று வரும் நிலையில், பாலி மாங்குரோவ் காடுகளை உலகத் தலைவர்கள் இன்று காலை பார்வையிட்டனர்.

ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளான நேற்று தொடக்க நிகழ்வுடன் தொடங்கிய மாநாட்டில் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று காலை பாலியில் உள்ள நுரா ராய் மாங்குரோவ் காடுகளை  பார்வையிட்ட உலகத் தலைவர்கள் செடிகளை நட்டனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

விநாயகர் சதுர்த்தி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

SCROLL FOR NEXT