முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

உலகம்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:54 AM
பகிர்:

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 700-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா தீவில் திங்கள்கிழமை காலை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 எனப் பதிவானது.

இந்த நிலநடுக்கம் ஜகார்த்தா நகரம் வரை உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் தெருக்களுக்கும், காலியான திடலுக்கும் ஓடினர். இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

படுகாயம் அடைந்தவர்கள் பெரும்பாலானோர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →