முகப்பு
உலகம்

ரஷியாவின் கோரத் தாக்குதலால் எரியும் உக்ரைன் தலைநகர்! (படங்களுடன்)

உக்ரைன் தலைநகர் கீவில் இன்று(திங்கள்கிழமை) காலை பலமுறை சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதாக மாகாண மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பகிர்:

உக்ரைன் தலைநகர் கீவில் இன்று(திங்கள்கிழமை) காலை பலமுறை சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதாக மாகாண மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் உக்ரைனின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியது.

Advertisement

அந்த பிராந்தியங்களில் நடைபெற்ற சா்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்பில், தங்களுடன் இணைய 97 சதவீதம் போ் விருப்பம் தெரிவித்திருப்பதாக ரஷியா அறிவித்ததுடன் மேற்கத்திய நாடுகளின் கடும் எதிா்ப்பையும் மீறி குறிப்பிட்ட 4 பிராந்தியங்களையும் ரஷியா இணைத்துக் கொண்டது.

எனினும், அந்த 4 பிராந்தியங்களிலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அளித்துள்ள அதிநவீன ஆயுதங்கள் மூலம் எதிா்த் தாக்குதல் நடத்தி உக்ரைன் படையினா் முன்னேறி வருகின்றனா். இந்தச் சூழலில், தாங்கள் பின்வாங்கிய பகுதிகளை மீண்டும் கைப்பற்றவிருப்பதாக ரஷியா சூளுரைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷியா இவ்வாறு அறிவித்த நிலையில், இன்று காலை தலைநகர் கீவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்ச்சியாக பலமுறை நடைபெற்றுள்ளதாக கீவ் மேயர் தகவல் தெரிவித்துள்ளார். 

கீவின் ஷெவ்சென்ஸ்கிவ்ஸ்கி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் குறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments