முகப்பு
உலகம்

போரில் சரணடைய மாட்டோம்: உக்ரைன் உறுதி

ரஷியாவுடனான போரில் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
உக்ரைன் படையினர்
பகிர்:

ரஷியாவுடனான போரில் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரஷியாவையும் அந்த நாட்டால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலம், சனிக்கிழமை நடத்தப்பட்ட லாரி குண்டுவெடிப்பில் சேதப்படுத்தப்பட்டது.

இதனால், அந்தத் தீவுடன் ரஷியாவுக்கு இருந்த ஒரே சாலை வழி விநியோக இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இந்த தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,  உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஏவுகணை மூலம் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தினர். இதில், பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ரஷியாவுடனான போரில் ஒருபோதும் நாங்கள் பின்வாங்கவோ சரணடையவோ போவதில்லை. தொடர்ந்து போரிடுவோம் என உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →