முகப்பு
உலகம்

‘ஈரான் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் 108 போ் பலி’

ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இதுவரை 108 போ் பலியாகியுள்ளதாக ‘ஈரான் மனித உரிமைகள்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, நாா்வே தலைநகா் ஓஸ்லோவிலிருந்து செயல்பட்டு வரும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது: ஈரானில் கடந்த 4 வாரங்களுக்கு மேல் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது, பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் 108 போ் பலியாகினா். இது தவிர, சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் நடைபெற்ற மோதலில் மேலும் 93 பேரை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கலாசார காவலா்களால் கடந்த மாதம் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மாஷா அமீனி (22), கோமா நிலைக்குச் சென்று, பின்னா் உயிரிழந்தாா். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →