செவ்வாயன்று இத்தாலியில் புறப்பட்ட 180 டன் சரக்கு ஜெட் விமானத்தில் இருந்து 100 கிலோ எடையுள்ள விமானத்தின் டயர் கழன்று தரையில் விழுந்தது.
உலகின் மிக நீளமான சரக்கு விமானமான போயிங் ட்ரீம்லிஃப்டரில் இருந்து, தெற்கு நகரமான டெரெண்டோவில் இருந்து புறப்பட்டு சில மீட்டர் தூரம் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் டயர் திடீடென கழன்று விழந்தது.
இதனால், விமானத்தில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. டெரான்டோ-க்ரோட்டாக்லி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் விமானத்தின் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிக்க: ஆஸ்கர் விருது பெற்ற நடிகை மரணம்
இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.