ப்ளீஸ்.. எனது வாசனை திரவியத்தை வாங்குகள்; அப்போதுதான் நான்: கெஞ்சும் எலான் மஸ்க்
எலான் மஸ்க், தனது டிவிட்டர் புரொஃபைலிலும் வாசனை திரவிய விற்பனையாளர் என்று மாற்றி பலரின் புருவங்களையும் உயர்த்தச் செய்திருக்கிறார்.
பல்வேறு தொழில்களை செய்துவரும் எலான் மஸ்க், மீண்டும் டிவிட்டரையே கதிகலங்கச் செய்துள்ளார். எரியும் முடி (பர்ன்ட் ஹேர்) என்ற பெயரில் வாசனை திரவிய தொழிலில் கால்பதித்திருக்கும் எலான் மஸ்க், தனது டிவிட்டர் புரொஃபைலிலும் வாசனை திரவிய விற்பனையாளர் என்று மாற்றி பலரின் புருவங்களையும் உயர்த்தச் செய்திருக்கிறார்.
தி டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவையிட்டுள்ளார். அதாவது, ப்ளீஸ் எனது வாசனை திரவியங்களை வாங்குங்கள். அப்போதுதான் நான் டிவிட்டரை வாங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமையன்று, டிவிட்டரில் தனது புதிய வாசனை திரவிய தொழில் குறித்து எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அனைவரும் பயன்படுத்தும் வகையிலான வாசனை திரவியம் இந்திய ரூபாயில் 8,400 என்கிறது விலைப்பட்டியல்.
இதையும் படிக்க.. மீண்டும் ஒரு சுவாதியா? ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை: இளைஞர் கைது
கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.