உலகம்

சார்ஜர் இல்லாமல் விற்பனை: ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.165 கோடி அபராதம்

சார்ஜர் இல்லாமல் ஐஃபோனை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.165 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

சார்ஜர் இல்லாமல் ஐஃபோனை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.165 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் தனக்கென தனி முத்திரையுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

புதிதாக எந்த ஸ்மார்ட்ஃபோன்கள் சந்தைக்கு வந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்களுக்கென உலகளவில் கவனம் உண்டு.

இருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் சில காலமாக சார்ஜர் வழங்கமால் தன் ஐபோன்களை விற்பனை செய்து வருகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் மின்னணு கழிவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சார்ஜர் அடாப்டரை ஐஃபோனுடன் விற்காமல் இருக்கிறோம் என ஆப்பிள் நிறுவனம் கூறிவருகிறது.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் சார்ஜர் இல்லாமல் ஐஃபோனை விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால்,  தடை மீறி சார்ஜர் இல்லாமல் ஐஃபோன் 13-யை ஆப்பிள் நிறுவனம் அந்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இதனால், பிரேசில் சிவில் நீதிமன்றம் தடையை மீறியதற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு 2 கோடி டாலர்(ரூ.165 கோடி) அபராதம் விதித்துள்ளது. மேலும், பிரேசிலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐஃபோன் 12, ஐஃபோன் 13 ரகங்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு சார்ஜர் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3,707 கோயில்களில் குடமுழுக்கு நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சாத்தனூா் அணையிலிருந்து 9000 கனஅடி நீா் திறப்பு! பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சாகித்திய அகாதெமி விருது படைப்புகளின் திறனாய்வு நூல் வெளியீடு!

அமெரிக்க ராணுவ வீரா்களுக்கு தடையின்றி ஊதியம்: பாதுகாப்புத் துறைக்கு டிரம்ப் உத்தரவு!

கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT