உலகம்

அமெரிக்கா-தைவான் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான பிரச்னை ஒரு புறமிருக்க தைவானுடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது.

DIN

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான பிரச்னை ஒரு புறமிருக்க தைவானுடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது.

புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் மூலங்கள் மற்றும் 5ஜி தொலை தொடர்பு வசதிகள் உள்ளிட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையேயும் கையெழுத்தாகியுள்ளது. இதனை தைவான் நாட்டின் பொருளாதரத் துறை அமைச்சர் வாங் மெய் ஹுவா உறுதிப்படுத்தியுள்ளார்.

வாஷிங்டனில் ஊடகங்களுக்கு முன்னதாக அவர் பேசியதாவது: அமெரிக்கா மற்றும் தைவானைச் சேர்ந்த நிறுவனங்கள் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் அமெரிக்கா மற்றும் தைவான் இடையே பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் மூலங்கள் மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் சிறப்பாக அமையும். இந்த பயணத்தின் மூலம் தைவானுக்கு மேலும் பல துறைகளில் அமெரிக்காவின் உதவி கிடைக்கும் என்றார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் நேரடி சந்திப்பான தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முதலீடு சார்ந்த சந்திப்பில் கைழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT