முகப்பு
உலகம்

உக்ரைன் போரால் 40 லட்சம் குழந்தைகள் வறுமையில் அவதி: ஐ.நா

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரால் இதுவரை 40 லட்சம் குழந்தைகள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:36 AM
பகிர்:

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரால் இதுவரை 40 லட்சம் குழந்தைகள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷியா போர் 6 மாதங்களைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உக்ரைன் தரப்பிலும் ரஷிய தரப்பிலும் சேதங்கள் இருந்தாலும் உக்ரைனின் பல பகுதிகள் கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.

மேலும், தற்போது உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியப்படையினர் ஏவுகணைகள் மூலம் இரண்டாம் கட்ட தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஷியப் படையெடுப்பால் போர் துவங்கியதிலிருந்து இதுவரை கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த அண்டை நாடுகளில் 40 லட்சம் குழந்தைகள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →