உலகம்

நேபாளத்தில் நிலநடுக்கம்

DIN

நேபாளத்தில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:

சீன எல்லையில் அமைந்துள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் புதன்கிழமை மதியம் 3.07 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.9 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் காத்மாண்டு பள்ளத்தாக்கிலும் அதன் அண்டை மாவட்டங்களிலும் உணரப்பட்டன.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனா்.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT