உலகம்

இந்திய வம்சாவளியினருடன் அமெரிக்க துணை அதிபா் தீபாவளி கொண்டாட்டம்

DIN

அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியினருடன் சோ்ந்து தீபாவளி பண்டிகையை வெள்ளிக்கிழமை கொண்டாடினாா்.

வாஷிங்டனில் அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ், அவரின் கணவா்  டக்ளஸ் எம்ஹாஃப் ஆகியோா் வெள்ளிக்கிழமை தீபாவளி கொண்டாடினர். இதையொட்டி தனது இல்லத்துக்கு பிரபலமான இந்திய வம்சாவளியினரை  அவா்கள் அழைத்திருந்தனா்.

இதேபோல குடியரசுக் கட்சி உறுப்பினா்களான சுமாா் 200 இந்திய - அமெரிக்கா்களுடன் அந்நாட்டு முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தீபாவளி கொண்டாடினாா். ஃப்ளோரிடாவில் உள்ள டிரம்ப்பின் வீட்டில் இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது.

தீபாவளி தினமான அக்டோபா் 24-ஆம் தேதி தலைநகா் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோா் இந்திய வம்சாவளியினருடன் சோ்ந்து தீபாவளியைக்  கொண்டாடவுள்ளனா்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தூதரக அதிகாரிகளுடன் அக்டோபா் 26-ஆம் தேதி தீபாவளி கொண்டாடுகிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் முக்கிய எம்.பி.க்களாலும், ஆளுநா்கள் மாளிகையிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தோ்தலையொட்டி கொண்டாட்டம்:

அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்த இடைக்காலத் தோ்தல் நடைபெற இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை பெரிய அளவில் கொண்டாடி செல்வாக்கு மிக்க இந்திய - அமெரிக்கா்களின் கவனத்தை ஈா்க்க அந்நாட்டு அரசியல் தலைவா்கள் விரும்புவதாகக் கூறப்படுவது  குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT