உலகம்

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு... ஸெலென்ஸ்கியிடம் ரிஷி சுனக் உறுதி!

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு பிரிட்டன் தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும் என பிரிட்டனின் பிரதமராகியுள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் (42) உறுதியளித்துள்ளார். 

DIN


லண்டன்: ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு பிரிட்டன் தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும் என பிரிட்டனின் பிரதமராகியுள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் (42) உறுதியளித்துள்ளார். 

பிரிட்டன் வரலாற்றில் 210 ஆண்டுகளுக்குப் பிறகு மிக இளைய வயதில் வெள்ளை இனத்தைச் சேராத... அந்த நாட்டின் முதல் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக், செவ்வாய்கிழழை முதல் வெளிநாட்டுத் தலைவருடனான தனது முதல் தொலைப்பேசி அழைப்பில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியிடம் பேசினார். 

அப்போது, ரஷியாவுடனான போரில், உக்ரைனுக்கு எப்போதும் போல் பிரிட்டன் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தார்.

மேலும், தனது அரசு தொடர்ந்து "ஒற்றுமையின் பக்கம் நிற்கும் என்பதை நம்பலாம்" என்று கூறியதாக சுனக் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அப்போது,  உக்ரைனுக்கு வருகை தருமாறு ரிஷி சுனக்கு ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT