உலகம்

பிரதமரான பிறகும் சிறிய இல்லத்துக்கு குடும்பத்துடன் திரும்பும் ரிஷி சுனக்

DIN

பிரிட்டனின் பிரதமா் பொறுப்பை ஏற்ற பிறகும், லண்டன் டௌனிங் தெருவில் ஏற்கெனவே வசித்த சிறிய இல்லத்துக்குத் திரும்பப் போவதாக ரிஷி சுனக் அரிவித்துள்ளாா்.

அந்தத் தெருவில் 10-ஆம் எண் கட்டடம்தான் பிரிட்டன் பிரதமா்களின் அலுவலகமாகவும் அதிகாரபூா்வ இல்லமாகவும் கடந்த 1735-ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தது. எனினும், அதைவிட, அருகில் 11-ஆம் எண் கட்டடத்து முதல் தளக் கட்டடம் பெரிதாகவும் வசதியாகவும் இருந்ததால் அதனையை தங்களது இல்லமாக அண்மைக் கால பிரதமா்கள் பயன்படுத்தி வந்தனா்.

இதற்கு முன்னா் போரிஸ் ஜான்ஸன் பிரதமராக இருந்தபோது கூட அங்குதான் வசித்தாா். அவரிடம் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக், அதைவிட சிறிய 10-ஆம் எண் இல்லத்தில் வசித்தாா்.

இந்த நிலையில், அந்த இல்லம் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளதால் பிரதமரான பிறகும் அங்கேயே குடும்பத்தினருடன் வசிக்கப் போவதாக ரிஷி சுனக் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT