உலகம்

சோமாலியாவை உலுக்கிய இரட்டை குண்டு வெடிப்பு, பலர் பலியான சோகம்

சோமாலியா தலைநகர் மோகடிசுவில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் சோமாலியாவை உலுக்கியுள்ளது.

DIN

சோமாலியா தலைநகர் மோகடிசுவில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் சோமாலியாவை உலுக்கியுள்ளது.


இந்த இரட்டை குண்டு வெடிப்புத் தாக்குதல் அரசு அலுவலக கட்டடங்கள் அமைந்துள்ள போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதியில் நிகழ்ந்துள்ளது. 

இந்த குண்டு வெடிப்பில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 

சோமாலியா அதிபர், பிரதமர் மற்றும் பல மூத்த அதிகாரிகள் தீவிரவாதத்தினை கட்டுப்படுத்துவது குறித்த கூட்டம் ஒன்றில் இன்று (அக்டோபர் 29) கலந்து கொள்ள இருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்-ஷபாப் அமைப்பு சோமாலியா தலைநகர் மோகடிசு மற்றும் நாட்டின் முக்கியப் பகுதிகளை குறிவைத்து தாக்குவதை வழக்கமாக வைத்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கல்வித் துறை அமைச்சக கட்டடத்தில் தாக்குதல் நடத்தியது. அதேபோல இந்த அமைப்பால் கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டத் தாக்குதலில் 500க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சார்லி கிர்க் கொலைக் குற்றவாளி கைது! 22 வயது இளைஞர் சிக்கிய பின்னணி என்ன?

ரகசியமாக இந்தியா வந்து சென்ற தலிபான் அமைச்சர்கள்?

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: டிவிஎஸ் மோட்டார் தேவை அதிகரிப்பு!

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 86 பேர் பலி

திமுக மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்: விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 12.09.25

SCROLL FOR NEXT