உலகம்

சோமாலியாவில் இரட்டை கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

DIN

சோமாலியா தலைநகரம் மொகதிஷுவில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் சனிக்கிழமை நிகழ்ந்த இரட்டை காா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான சோமாலியாவின் கிளா்ச்சிப் படையை (அல் ஷபா) அரசுக்கு எதிராக போராடி வருகிறது. இதனால் அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

சோமாலியாவின் கிளா்ச்சிப் படையை (அல் ஷபா) ஒழிப்பது தொடா்பான ஆலோசனையில் அந்நாட்டு அதிபா், பிரதமா் ஆகியோா் சனிக்கிழமை ஈடுட்டிருந்த நிலையில், தலைநகர் மொகதிஷுவில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நிகழந்த இரட்டை கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் வாகனங்கள், கட்டடங்கள் பாதிக்கப்பட்டு ஏராளமானோா் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும், செய்தியாளா் ஒருவர் உயிரிழந்துள்ளாா் என்று தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், அடுத்தடுத்து நிகழந்த குண்டு வெடிப்பில் 100 பேர் இறந்துள்ளதாகவும், 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் நடைபெற்ற லாரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT