உலகம்

பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்த ஆப்பிள் நிறுவனம்

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு உதவ முன்வந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநருக்கு நோபல் வெற்றியாளர் மலாலா நன்றி தெரிவித்துள்ளார். 

DIN

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு உதவ முன்வந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநருக்கு நோபல் வெற்றியாளர் மலாலா நன்றி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக கடும்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக இதுவரை 1100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த பேரிடருக்கு உலகின் பல்வேறு நாடுகளும் உதவ முன்வந்துள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானின் இயற்கை பேரிடருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய தயாராக உள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் டிம் குக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், பாகிஸ்தானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளம் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்கள், இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்களது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்ளும்
எனத் தெரிவித்துள்ளார்.

டிம் குக்கின் இந்த அறிவிப்புக்கு நோபல் வெற்றியாளரும், பெண் கல்வி ஆர்வலருமான மலாலா நன்றி தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்குவங்க பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

உலகம் எல்லா உயிா்களுக்குமானது என்பதை மனிதா்கள் உணர வேண்டும்: கவிதா ஜவகா்

வரதட்சிணைக் கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

12 கடைகள், நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT