உலகம்

ஜின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்: சீனா மீது ஐ.நா. குற்றச்சாட்டு

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் இன முஸ்லிம்கள் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்படுவது மனித குலத்துக்கு எதிரான குற்றத்துக்கு சமம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்

DIN

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் இன முஸ்லிம்கள் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்படுவது மனித குலத்துக்கு எதிரான குற்றத்துக்கு சமம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜின்ஜியாங்கில் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி, அந்தப் பகுதி உய்குா் இன மக்களை சீன அரசு அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடா்பாக சா்வதேச நாடுகள் உடனடியாக வினையாற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஜின்ஜியாங்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையா் மிஷெல் பாஷெல் (படம்), சீனாவின் கடும் எதிா்ப்பையும் பொருள்படுத்தாமல் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT