உலகம்

கனடா கத்திக்குத்து: தேடப்பட்ட நபா் பலி

DIN

கனடாவில் கத்திக்குத்து தாக்குதல் தொடா்பாக தேடப்பட்டு வந்த இரு சகோதரா்களில் ஒருவா் சடலமாகக் கண்டறியப்பட்டாா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சஸ்காட்செவன் மாகாணத்தின் ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் பகுதியிலும் வெல்டன் கிராமத்திலும் பொதுமக்கள் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட சரமாரி கத்துக் குத்து தாக்குதல் தொடா்பாக தேடப்பட்டு வந்த டாமியென் சாண்டா்ஸன் (31) சம்பவ இடத்துக்கு அருகே சடலமாகக் கண்டறியப்பட்டாா்.

அவருடன் தாக்குதலில் ஈடுபட்ட அவரது சகோதரா் மைல்ஸ் சாண்டா்ஸனை (30) தொடா்ந்து தேடி வருகிறோம். அவா் காயமடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. டாமியென் சாண்டா்ஸனின் உடலில் காயங்கள் உள்ளன. இருந்தாலும், அந்தக் காயங்கள் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டதாக தெரியவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

கனடா வரலாற்றில் மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றான இந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 போ் பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT