உலகம்

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

DIN

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான மேற்கு பப்புவா பகுதியில் சனிக்கிழமை காலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதில் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். எனினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. 

அபேபுரா நகரத்திலிருந்து 272 கி.மீ. தொலைவில் கடலுக்கு 15 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மேற்கு சுலாவேசி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 6,500 பேர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 25 பேர் இறந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT