பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேரணி ஒன்றில் உரையாற்றுவதற்காக சிறப்பு விமானம் மூலம் இஸ்லாமாபாத்தில் இருந்து குஜ்ரன்வாலாவுக்கு இன்று காலை புறப்பட்டார்.
இதையும் படிக்க- கேரளத்தில் நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
ஆனால் அவரது விமானம் புறப்பட்ட 5 நிமிடத்தில் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறங்கியது. மோசமான வானிலை காரணமாக இம்ரான் கான் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து இம்ரான் கான் சாலை மார்க்கமாக குஜ்ரன்வாலா புறப்பட்டு சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.