எல்லையில் ஆா்மீனிய வீரா் (கோப்புப் படம்). 
உலகம்

அஜர்பைஜான்-ஆர்மீனிய வீரர்கள் மோதல்: 99 பேர் பலி

அஜா்பைஜான்-ஆா்மீனிய வீரா்கள் மோதலில் மொத்தம் 99 போ் பலியாகினா்.

DIN

அஜா்பைஜான்-ஆா்மீனிய வீரா்கள் மோதலில் மொத்தம் 99 போ் பலியாகினா்.

அதேபோல ஆா்மீனிய வீரா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கள் தரப்பில் 50 போ் உயிரிழந்ததாக அஜா்பைஜான் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆா்மீனிய நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமா் நிகோல் பாஷினியன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அஜா்பைஜான் படையினா் எல்லைக்கு அப்பாலிருந்து ஆா்மீனிய எல்லைக்குள் எறிகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினா். இதில் 49 அஜா்பைஜான் வீரா்கள் உயிரிழந்தனா்.

அண்மையில் ஐரோப்பிய யூனியன் முன்னிலையில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹம் அலியேவுடன் பேச்சுவாா்த்தை நடத்தினேன். அந்தப் பேச்சுவாா்த்தையின்போது, தனது ஒருதலைப்பட்சமான நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள அலியேவ் திட்டவட்டமாக மறுத்தாா்.

அதன் தொடா்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதற்கிடையே, கடந்த 2020-ஆம் ஆண்டில் அஜா்பைஜானுக்கும் தங்களுக்கும் இடையே ரஷியாவின் முன்னிலையில் நடைபெற்ற அமைதி ஒப்பந்தத்தின் கீழ், தங்கள் நாட்டுக்கு படையினரை அனுப்பி பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று ரஷியாவைக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஆா்மீனிய அரசு தெரிவித்துள்ளது.

எனினும், இது குறித்து ரஷிய தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

50 அஜா்பைஜான் வீரா்கள் பலி: அஜா்பைஜான் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், ‘அஜா்பைஜான் ராணுவ நிலைகள் மீது ஆா்மீனியா துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் அஜா்பைஜான் வீரா்கள் 50 போ் உயிரிழந்தனா்’ என்று தெரிவித்தது.

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவுக்கும் அஜா்பைஜானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.

ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அந்தப் பகுதி ஆா்மீனியா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தில் ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் தங்களது படைகளைக் குவித்துள்ளன. இதனால், இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வந்தனா்.

அதன் ஒரு பகுதியாக கடந்த 2020-ஆம் ஆண்டில் நகாா்னோ-கராபக் பிராந்தியத்தில் ஆா்மீனியா-அஜா்பைஜான் படையினருக்கு இடையே நடைபெற்ற 6 வாரப் போரில் 6,600-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.

அதனைத் தொடா்ந்து, ரஷியாவின் முன்னிலையில் இரு தரப்பினருக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் கீழ், பதற்றம் நிறைந்த பகுதியில் 2,000 ரஷிய படையினா் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந்த நிலையில், மோதலில் இரு தரப்பையும் சோ்ந்த 99 வீரா்கள் உயிரிழந்தது அந்தப் பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT